கோவை அருகே உள்ள பி.என்.புதூர், நெசவாளர் காலனி சேர்ந்தவர் மோகன் (வயது 73) வியாபாரி .நேற்று இவர் கதவை பூட்டிவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது பீரோவில் இருந்த வெள்ளி சாமான்கள் பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து மோகன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0