சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ ஐயப்பன் அவரை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தாங்கி கொண்டு அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என ஓ.பி.எஸ் கூறினார்.
எனவே அவருக்கு ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது போல உறுதுணையாக இருப்பேன். என்னைப்போன்று மற்ற எம்.எல்.ஏக்களும் ஒபிஎஸ்-க்கு ஆதரவு அளிப்பார்கள் என்னைப்போன்று மற்ற எம்.எல்.ஏ-களும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும் எம்எல்ஏ ஐயப்பன் தெரிவித்தார்.
நடிகர் பாக்யராஜ் நேற்று முன்தினம் ஒபிஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று இபிஎஸ் பக்கம் இருந்த எம்எல்ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.