மத்திய தொழிலாளர்துறையின் சார்பாக 7 நாட்கள் இலவச மருத்துவம் முகாம் நடைபெற இருப்பதால், இது தொடர்பாக தமிழகம் மண்டல துணை தலைமை தொழிலாளர் கமிஷனர் அருண்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மண்டல தொழிலாளர் அமைப்பு சார்பாக மார்ச் 7 (இன்று) 13ஆம் தேதி வரை இலவச மருத்துவம் மற்றும் கண் மருத்துவ முகாம்கள் சென்னை, திருச்சி, வேலுார், திருநெல்வேலி நகரங்களில் நடைபெற இருக்கின்றன. மேலும் “இ -ஷ்ரம்”, அமைப்புச்சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு பதிவு செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்களும் நடைபெற இருக்கின்றன.
சென்னை வடபழநி, வண்ணாரப்பேட்டை, திருச்சி காட்டூர், வேலுார் -சத்துவாச்சேரி, வாணியம்பாடி, திருப்பத்துார், குடியாத்தம், திருநெல்வேலி -முக்கூடல், தென்காசி, புளியங்குடி, வி.கே.புதுார் மற்றும் கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலுள்ள தொழிலாளர் நல மருத்துவமனைகளில் முகாம் நடைபெறும். அதாவது காலை 8:30 முதல் மாலை 6:00 மணி வரை முகாம் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான சேர்க்கை பதிவு, தொழிலாளர் உரிமை குறித்த விழிப்புணர்வு முகாமும் நடைபெற இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.