நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் (18.12.2024) சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 45 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சிறுபான்மையினர்களின் நலன் கருதி பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்கள் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறுபான்மையினர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் உலகெங்கும் டிசம்பர் 18-ஆம் தேதி ”சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 18-ஆம் தேதி ”சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா” சிறப்பாக கொண்டாடப் பட்டு, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து அவர்களுக்கு தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இன்று நமது மாவட்டத்தில் நடைபெறும் ”சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா” நிகழ்ச்சியில் சுமார் 45 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப் பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதனை சிறுபான்மை யினர் மக்கள் பயன்படுத்தி கொண்டு தங்களது பொருளாதாரம் மற்றும் வாழ் வாதாரத் தினை உயர்த்தி கொள்ள வேண்டும். மேலும், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, அவர்கள் உயர்கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் நல்ல வேலையில் அவர்கள் சேருவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோல், தங்கள் பகுதியில் குழந்தை திருமணம் உள்ளிட்ட ஏதேனும்
நடைபெற்றால் அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க
வேண்டும். அரசால் பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது, அதனையும் நீங்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். அதேபோல், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் கடன் பெற்று தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து தொழில்முனைவராக மாற முன்வர வேண்டும். அரசின் திட்டங்கள் தகுதிவாய்ந்த அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அலுவலர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார், விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.5,030 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், 19 பயனாளிகளுக்கு கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவுப் பெற்ற உறுப்பினர் களுக்கு அடையாள அட்டைகளும், 14 பயனாளிகளுக்கு கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள், விதவைகளுக்கு சிறு தொழில் தொடங்க தலா ரூ.20,000 மதிப்பீட்டில் ரூ.2,80,000 க்கான காசோலைகளை யும், 4 பயனாளிகளுக்கு கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் ஏழை, எளிய
மக்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள், விதவைகளுக்கு சிறு தொழில் தொடங்க தலா ரூ.10,000 மதிப்பீட்டில் ரூ.40,000 க்கான காசோலைகளையும், 1 பயனாளிக்கு வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக ரூ.25,000 க்கான காசோலையும் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரீே’ கண்ணன், உதகை வட்டாட்சியர் சங்கர்கணீே’, முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் இணை செயலாளர்கள் சாதீக், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் செயலாளர் ஸ்டெல்லா சாம்சன், மற்றும் சங்க உறுப்பினர்கள், சிறுபான்மையினர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0