திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 12 புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்கள்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவ மனையில் நடைபெற்ற விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 163 பயனாளிகளுக்கு ரூபாய் 1.48 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் சரவணன் எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமார் பழனியாண்டி சவுந்தர பாண்டியன் காடு வெட்டி தியாகராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி மாவட்ட சுகாதார நல அலுவலர் மணிவண்ணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்கா தரணி மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவர்கள் அரசு அதிகாரிகள் செவிலியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.