திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் வேலு ஆய்வு..!

திருவண்ணாமலை கிரிவல பாதையில் புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் கட்டுவதற்கான இடத்தினை பொதுப்பணித்துறை, அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகரம் ஆன்மீகம் நிறைந்த நகரம். அருள்மிகு அருணாசலேசுவர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலமும் செல்கின்றனர். எனவே அவர்களின் அடிப்படை தேவையான நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை கட்டுவதற்கான இடத்தினை கிரிவல பாதையில் செங்கம் பிரிவு சாலை சந்திப்பு மேற்கு காவல் நிலையம் அருகிலும், அடிஅண்ணாமலை சீனிவாச பள்ளி அருகிலும், வாயு லிங்கம் அருகிலும், கோசாலை இலங்கை அகதிகள் முகாம் அருகிலும், சின்னக்கடை வீதியிலும்  அமைச்சர் வேலு  ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்,  நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்., கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, பொது பணித்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்..