நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகளை அமைச்சர் பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட
கோவில்மேடு மற்றும் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட புதுலைன் மந்தாடா ஆகிய பகுதிகளில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக (03.12.2024) திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தித் துறை அமைச்சர், அரசு தலைமை கொறடா கா. இராமச்சந்திரன் ஆகியோர்களுக்கு கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமமாலினி பொன்னாடை அணிவித்து வரவேற்றார், மற்றும் விழாவிற்கு வருகை புரிந்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் பேரூராட்சி உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டன, நிகழ்ச்சி தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல் படுத்தி வருகிறார்கள். மேலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் குடும்ப அட்டைதார்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு இடங்களில் பகுதி நேர நியாய விலைக்கடைகள் மற்றும் நடமாடும் நியாய விலைக்கடைகள் ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் குடும்ப அட்டைதார் களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, வழங்கப்பட்டு வருகிறது, மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க,
நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், உல்லாடா பகுதியில் இயங்கி வரும் நியாய
விலைக்கடையில் உள்ள 1,020 குடும்ப அட்டைகளில், பொதுமக்களின் கோரிக்கையினை
ஏற்று, அங்கிருந்து 222 குடும்ப அட்டைகளை பிரித்து, புதுலைன் மந்தாடா பகுதியில் புதிய
பகுதி நேர நியாய விலைக் கடையினையும், உதகை வட்டம், ஆடாசோலை பகுதியில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் உள்ள 584 குடும்ப அட்டைகளில், பொதுமக்களின்
கோரிக்கையினை ஏற்று, அங்கிருந்து 164 குடும்ப அட்டைகளை பிரித்து, கோவில்மேடு
என்ற பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு தொலைதூரம் செல்லாமல், தங்களது பகுதியின் அருகிலேயே செயல்படும் பகுதி நேர நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும், திறந்து வைக்கப்பட்டுள்ள புதுலைன் மந்தாடா பகுதி நேர நியாய விலைக்கடையானது வாரத்தின் சனிக்கிழமை யிலும், கோவில்மேடு பகுதி நேர நியாய விலைக்கடையானது வாரத்தின் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க திறந்திருக்கும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் செயல்படும் இந்த பகுதி நேர நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைய வேண்டும் என மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா இ.ஆ.ப.,
உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
தயாளன், துணைப் பதிவாளர் அய்யனார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், உதகை நகரமன்றத் துணைத்தலைவர் ரவிக்குமார், கேத்தி பேரூராட்சித்தலைவர் ஹேமமாலினி, கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நட்ராஜ், குன்னூர் வட்டாட்சியர் ஜவஹர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், மேலூர் ஒன்றிய செயலாளர் கேத்தி லாரன்ஸ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பகுதி மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.