கோவை சூலூர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கோவையில் 6 புதிய வழித்தட பேருந்துகள் உள்ளிட்ட 27 புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை துவக்கி வைத்தும், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட போக்குவரத்து பணியாளர்கள் 32 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினர்.
முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி;-
தமிழ்நாடு முதல்வராக தளபதி அவர்கள் பொறுப்பேற்றவுடன் புதிய பேருந்துகள் 814 பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போது, 274 புதிய பேருந்துகள் தற்போது பெறப்பட்டுள்ளது. அதில், இன்று 27 புதிய பேருந்துகள் துவங்கப்பபட்டும், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என 32 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெறுகின்றது. முதல்வரின் சிறப்பு வாய்ந்த திட்டங்களில் விடியல் பயணம் திட்டம், ஒட்டுமொத்த தாய்மார்களின் அன்பையும் ஆசியும் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் தான் காரணம். மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், போக்குவரத்து துறை தொடர்பானவற்றை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதற்கு மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர் ;-
புதிய பேருந்துகள், பணி நியமண ஆணை என இந்த சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்து துறை மெல்ல மெல்ல சீரடைந்து வருகின்றது. கடந்த காலங்களில் இல்லாத வகையில், மக்கள் பயன்பெறும் வகையில், புதியதாக 8 ஆயிரத்து 20 பேருந்துகள் பெற ஒப்பந்தம் செய்யப் பட்டு, முதல் கட்டமாக, 3 ஆயிரம் பேருந்துகள் வரப்பெற்றுள்ளது. ஒவ்வொரு துறையிலும், நமது முதல்வர் சிறப்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அவர் கண்காணித்து வருவதால்தான் அதில் இருக்கும் குறைகள் நிவர்த்தி செய்யப்படு வருகின்றது. மகளிர் விடியல் பயணம் துவங்கப்பட்ட போது, 40 சதவீதமாக இருந்தது. தற்போது 69 சதவீதமாக உயர்ந்துள்ளது. மகளிர் இதில் பாதுகாப்பாக, சிறப்பாக, அதிகமாக பயணம் செய்து வருகின்றனர். இதுவரை இந்த திட்டம் மூலம் 595 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இந்த திட்டத்தின் சிறப்பை பார்த்து, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங் களிலும் இந்த சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 111,111ஏ, 90 எ உள்ளிட்ட புதிய 6 வழித்தடங்களில் இந்த திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூடுதலான பேருந்து களை முதல்வர் வழங்கி உள்ளார். ஒரு முதல்வர் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் நம்முடைய முதல்வர் தான் உதாரணம். இன்னும் பல திட்டங்களை வழங்குவதாக முதல்வர் கூறியுள்ளார். அதே நேரத்திலும் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த காலங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. அதேசமயம் தற்போது 32 பேருக்கு பணி ஆணை பெற உள்ளனர். கடந்த காலத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு திராவிட ஆட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஊதியஉயர்வு வழங்கப்பட்டது. தற்போது, இந்த மாதம் 28 , 29 தேதிகளில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உள்ளது. எனவே நிலுவையில் உள்ள தொகைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், போக்குவரத்து துறை பொது மேலாளர் செல்வகுமார், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொஅ.ரவி, எல்பிஎப் மண்டல தலைவர் பெரியசாமி, சிடிசி பொருளாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் மன்னவன், முத்து மாணிக்கம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பட்டனம் செல்வகுமார், நகர செயலாளர் கெளதமன், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைச்செயலாளர் பனப்பட்டி தினகரன், பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், புஷ்பலதா ராஜகோபால், சூலூர் பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி பசுமை நிழல் விஜயகுமார், எல் பி எப் செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.