திமுக மாநில விவசாய அணி சார்பில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ல. கள்ளிப்பட்டி பிரிவில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது . விழாவுக்கு திமுக மாநில விவசாய அணி இணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி தலைமை தாங்கினார் . இந்நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு முத்துசாமி கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வேட்டை திறந்து வைத்து . பொதுமக்களுக்கு நேர் மோர் இளநீர் நுங்கு தர்பூசணி வெள்ளரிப்பிஞ்சு ஆகியவைகளை பொதுமக்களுக்கு வழங்கி. அமைச்சர் சு முத்துசாமி கூறும் போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் நிலை வரும் வெயிலின் தாகத்தை தீர்க்க திமுக மாநில விவசாய அணியின் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழச்சாறுகள் வழங்கப்பட்டுள்ள வழங்கப்பட்டு வருகிறது இந்த நீர் மோர் பந்தல் மே மாதம் இறுதி வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் , திமுக துணை பொது செயலாளர் எம் பி எம் மன அந்தியூர் செல்வராஜ் ,அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ .ஜி .வெங்கடாசலம் , முன்னாள் சிட்கோவாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் ,திமுக மாநில நெசவாளர் துணைச் செயலாளர் மணிமாறன் , கோபி நகரக் கழக செயலாளர் நகர மன்ற தலைவர் ஆன நாகராஜன் , நம்பியூர் பேரூர் கழகச் செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் லக்கம்பட்டி பேரூர் கழக விவசாய அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நீர் மோர் பந்தல் திறப்பு விழா அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர்கள் கள்ளிப்பட்டி மணி செய்திருந்தார் .
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0