திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் மாலை அணிவிப்பு.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா நேற்று கோளாகளமாக கொண்டாடப்பட்டது இதையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் மா பிரதீப் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து திமுக சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே என் நேரு தலைமையில் முத்தரையர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் வைரமணி மத்திய மாவட்டம் தியாகராஜன் வடக்கு மாவட்டம் மேயர் அன்பழகன் எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன் ஸ்டாலின் குமார் பழனியாண்டி பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு உட்பட திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின்படி மாநகரச் செயலாளர் மு மதிவாணன் தலைமையில் கே என் சேகரன் வண்ணை அரங்கநாதன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் முத்தரையர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.