தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஊர் கேப்ஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக் ஆட்டோ சேவையைத் திருச்சியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனை மொபைல் செயலி அல்லது வாட்ஸ்அப் மூலமாக பதிவு செய்து. பயணம் மேற்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளது. ஊர் கேப்ஸ் சேவையை ஜூன் 23 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள. கலைஞர் அரங்கத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார் பணக்கார மக்களை குறிவைக்கும் இந்தியாவில் ஆன்லைன் டாக்சி சேவை துறையில் 2 நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வேளையில், இந்த ஆதிக்கத்தை உடைக்க சிறு சிறு நிறுவனங்களாகப் பல உருவெடுத்து வருகிறது. இது ஒரு துறையில் மோனோபோலி முறைய தகர்க்க உதவும். பொதுவாக ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனங்களுடன் இணைந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சேவை புரிவது வழக்கம். ஆனால், ஊர் கேப்ஸ் நிறுவனம் வித்தியாசமான முறையை கையாண்டு வருகிறது. ஓலா, உபர் போல் அல்லாமல் இந்த நிறுவனமே எலக்ட்ரிக் ஆட்டோக்களை சொந்தமாக வைத்திருப்பதுடன் அவற்றை இயக்குவதற்கு ஓட்டுநர்களையும் நியமித்து வருகிறது. இதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தி பயணிகளுக்கு சேவை செய்கிறது. 2 லட்சம் விவசாயிகளுக்கு உதவும் ஐஐடி பட்டதாரி அடங்கேப்பா..!! இந்த புதிய சேவை, ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக தொடங்கப்பட்டுள்ளதுஆன்லைன் டாக்சி சேவையில் நிறுவனங்களின் கட்டணத்தை விட, கூடுதலாக ரூ.30 முதல் ரூ.50 வரை வசூலிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அதிக கட்டணம் ஓட்டுனர்கள் ஆன்லைன் நிறுவனங்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய கமிஷனை சமாளிக்கவே என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் ஆன்லைன் ஆட்டோ சேவையைப் பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர். இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக, ஊர் கேப்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் ஆட்டோக்களை வாங்கி ஓட்டுநர்களை தங்களது ஊழியர்களாக நியமித்து இந்த சேவையை தொடங்கியுள்ளது. இனி ஆட்டையபோட OTP கூட தேவை இல்லையாம். மக்களே உஷார் மோசடி சம்பவங்களின் உச்சம் தற்போது 50 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இதனுடன் இணைந்து ஈடன் கிரீன் எனர்ஜி மற்றும் கான்டூரா சோலார் என்ற இரண்டு கிரீன் எனர்ஜி நிறுவனங்களுடன் இணைந்து, திருச்சி நகரில் 500 எலக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகப்படுத்தவும், அவற்றை சார்ஜ் செய்யும் வகையில் ஐந்து இடங்களில் சோலார் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் அல்லது சி.என்.ஜி. மூலம் இயங்கும் ஆட்டோக்களை விட எங்கள் கட்டணம் 25 சதவீதம் குறைவாக இருக்கும் ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மரியா ஆண்டனி தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் எலக்ட்ரிக் கார்களையும் பயன்படுத்தி கார் டாக்சி சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 50 சதவீத எலக்ட்ரிக் ஆட்டோக்களை பெண் ஓட்டுநர்கள் இயக்குவார்கள் என்றும் அவர் கூறினார். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்களை 120 முதல் 150 கிலோமீட்டர் பயணிக்கும் திறன் கொண்டது. More From GoodReturns திருச்சி நிறுவனத்தின் புரட்சி. திருச்சியில் வசிக்கும் போது மக்களுக்கு இந்த ஆட்டோ
பயணம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0