கோவை, மேட்டுப்பாளையம், அருகே உள்ள தேக்கம் பட்டி கிராமத்தில் 108 வயதுடைய இயற்கை விவசாயியான பாப்பம்மாள், வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு இயற்கை எய்தினார், அவரது உடலுக்கு குடும்பத்தினர் சம்பத்துடன், பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வீட்டில் குளிர் சாதன பெட்டியில் வைத்து இருந்த நிலையில் உறவினர்கள்,ஊர் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வருகின்றனர், இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவர் மு. க. ஸ்டாலினிடம் பெரியார் விருது பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியான மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி A. பாப்பம்மாள் (வ,108 ) உயிரிழந்த அவரது உடலுக்கு ,தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை,மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி, கட்சியி னருடன் நேரில் சென்று மறைந்த அன்னாரது உடலுக்கு மலர் வளையும் வைத்தும் மலர் தூவியும்அஞ்சலி செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள்.தொண்டர்கள் மரியாதை செய்தனர், இயற்கை விவசாயத்தின் மீது பற்றுக்கொண்ட பாட்டி பாப்பம்மாள் தனக்கு சொநதமான வயலில் இயற்கை முறையில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார், இதை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, கோவை க்கு 2021ல் வருகை தந்த போது நேரில் சநதித்து பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசி பெற்றார், இவருக்கு இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தாகவுக்கும், வயது மூப்பின் போது புத்துணர்ச்சியுடன் விவசாயம் செய்து வந்த பாப்பம்மாள் பாட்டிக்கு மத்திய, மாநில அரசுகள் பல விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0