திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர் மாவட்ட செயலாளர்கள் வைரமணி தியாகராஜன் மேயர் மு அன்பழகன் எம் எல் ஏக்கள் பழனியாண்டி ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி திமுக முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே என் நேரு பேசும் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் மாநகர் பகுதிகளில் அவரது உருவப் படத்தை வைத்து மரியாதை செலுத்தி கழகத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் இந்தியாவில் அரசியல் கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணியை அமைக்க கூடிய வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உயர்ந்துள்ளார் திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு முன்னால் முதலமைச்சர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும்
என்று முதல்வரிடம் கோரிக்கை வைப்போம் மிக உயரமான கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்காக பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0