திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் சிறார் இதழ் படைப்பாளிகளுக்கு அமைச்சர் தலைமையில் பாராட்டு விழா.

திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று(17.08.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறார் இதழ்களில் பங்களித்த மாணவ படைப்பாளிகளை பாராட்டும் விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சிறார் படைப்பாளிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் திரு.மா.பிரதீப் குமார் இஆப அவர்கள், இணை இயக்குநர் திருமதி.அமுதவல்லி அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கிருஷ்ணப்பிரியா, மண்டல தலைவர் திரு.மதிவாணன், மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.