இவர்கள் மூளையின் சிந்தனையை அந்த சிப் கமெண்ட்டுளாக பதிவு செய்து கொள்ளும். இதனால் நாம் நினைப்பதை நமது ஸ்மார்ட் போனும் கம்ப்யூட்டரும் நிறைவேற்றும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ஸ்மார்ட் டிவைஸ்களை நம்மால் மைண்ட் கன்ட்ரோல் செய்ய முடியும். இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எலான் மஸ்க், அந்த நிறுவனத்தை தொடங்கியதுபோது தெரிவித்திருந்தார்.
இந்த ஆராய்ச்சி 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதலில் குரங்குகள், எலிகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளை வைத்து நியூராலிங்க் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுவந்தது. இவற்றில் குரங்குகளின் மூளையில் பொருத்தப்பட்ட சிப்கள் சிறப்பாக வேலை செய்துள்ளன. சில குரங்குகள் கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தியும் இருக்கின்றன.
இதுதொடர்பான ஆய்வறிக்கைகளை நியூராலிங்க் நிறுவனம், FDA எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் (US Food and Drug Administration) சமர்ப்பித்து, அடுத்தக்கட்டமாக மனித உடலில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனிடையே நியூராலிங்க் நிறுவனத்தில், 2018ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட பரிசோதனையில், செம்மறி ஆடுகள், குரங்குகள், பன்றிகள் மற்றும் எலிகள் என 1,500 விலங்குகள் உயிரிழந்ததாக சர்ச்சைகள் கிளம்பின. இந்த எண்ணிக்கை தோராயமானது, பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்திருக்க கூடும் என்று நியூராலிங்க் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம், நியூராலிங்க் நிறுவனம், மனிதர்களிடம் ஆய்வு நடத்த அனுமதி அளிக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், நியூராலிங்க் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற சோதனைகளை மனிதர்களிடம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட முதல் நிறுவனம் நியூரோலிங்க் நிறுவனம் தான்.
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதை எலான் மஸ்க் ட்விட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். எங்கள் குழுவிற்கு கிடைத்த வெற்றி இது என்றும், வரும் காலத்தில் எங்களின் தொழில்நுட்பம் மனித இனத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் நியூரோலிங்க் நிறுவனமும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்து மனித மூளையின் நியூரான்களை கட்டுப்படுத்தும் வகையில் மைக்ரா சிப் பொருத்தப்பட உள்ளது.