சென்னை: தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் பங்களிப்பை செலுத்திய மறைந்த தலைவர்கள், அறிஞர்கள், உள்ளிட்டோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் காலத்திற்கும் அவர்கள் பெயர் சொல்லும் நினைவகங்கள், சிலைகளை நிறுவி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கட்சி பாகுபாடின்றி, அரசியல் பாரபட்சமின்றி கடந்த 2 ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்து கட்டிக் கொடுத்த நினைவகங்கள், நிறுவிய சிலைகள் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டப்பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு மண்டபம்.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னை காந்தி மண்டபத்தில்
திருவுருவச்சிலை. நாமக்கல் நகரில் சுப்பராயன் பெயரில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அரங்கம்.
ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் உத்தமத் தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகரியத்தில் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம்.
ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவாக விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் திருவுருவச்சிலை மற்றும் அரங்கம்.
நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு.
தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ரூ.48.66 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிலை.
தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் சிலை
சென்னை காந்தி மண்டபத்தில், ரூ.42.43 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சிதம்பரனாருக்கு மார்பளவு சிலை.
ரூ.72.50 லட்சம் மதிப்பீட்டில் ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லம் புனரமைப்பு பணிகள் மற்றும் திருநெல்வேலியில் உள்ள
வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாறு ஒலி-ஒளிக் காட்சிப் பணிகள்.
கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில், ரூ.43.70 இலட்சம் மதிப்பீட்டில் வ.உ.சிதம்பரனாருக்கு திருவுருவச் சிலை.