பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்- 6,000 போலீசார் குவிப்பு..!

ம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் 6000 ற்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிப்பு, போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த பரமக்குடி, 145 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் போலீசார்கள்.

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் தொடர்பான ஏற்பாடுகள்
மும்முரமாக நடைபெற்று வருகின்றன.ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சமுதாய தலைவர்கள்,அரசியல் கட்சித்
தலைவர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம்.இந்நிலையில் நாளை தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருபவர்கள் அவருடைய சொந்த வாகனத்தில் தான் வரவேண்டும், ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும், கோஷங்களை எழுப்பக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நினைவு தினத்தின் அன்று பொதுமக்கள் அச்சமின்றி அஞ்சலி செலுத்த, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பரமக்குடியில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரகார்க் தலைமையில் நடைபெற்றது.

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் மாவட்ட முழுவதும் 41 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் பரமக்குடி நகரில் பாதுகாப்புப் பணியினை கண்காணிக்கவும் ,விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் 70 நிரந்தர கண்காணிப்பு கேமராக்கள், இது தவிர காவல்துறை சார்பில் 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதி முழுவதும் ஆளில்லா விமான மூலமும் கண்காணிக்கவும் போலீசார்கள் திட்டமிட்டுள்ளனர். இப்பகுதி முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரபடுத்த திருச்சி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 6000திற்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் பரமக்குடி நகரம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.