தென்காசியில் அரசு திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் ஆய்வு..!

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன்  மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை  சேலம் (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அருள் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி.ராமலிங்கம் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயகுமார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைகுமார் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தென்காசி மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு திட்டப் பணிகள் குறித்து பார்வையிட்டார்கள். குற்றாலம் பேரூராட்சி பகுதியில் பொதுப்பணி துறை சார்பில் அரசு சுற்றுலா மாளிகை கட்டுவதற்கு இடம் தேர்வினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

புளியங்குடி அரசு மருத்துவமனையினையும், முள்ளிகுளத்தில் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டதோடு, சங்கரன்கோவிலில் ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டிடப்பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) முரளிசங்கர், பொதுபணித் துறை செயற் பொறியாளர் (கட்டிடம் மற்றும் கட்டுமானம்) திரு.அழகிரிசாமி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி, நகராட்சி மண்டல ஆணையாளர் விஜயலெட்சுமி, நகராட்சி ஆணையர் (பொ) சபாநாயகம், ஊராட்சி ஒன்றிய குழு லாலாசங்கரபாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.