வால்பாறையில் மருத்துவ பரிசோதனை முகாம்..!!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தொடங்கி வைத்து பணியாளர்கள் தேவைகள் குறித்து கேட்டறிந்து அவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்க் கொள்வதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், மேலாளர் ஜலாலுதீன், நகர் மன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சே.அன்பரசன், சமூக ஒருங்கிணைப்பாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது வால்பாறை ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் பாலா கலந்து கொண்டு விபத்துக்காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி அனைவரும் அத்திட்டங்களில் சேர்ந்து பயனடைய கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் மக்களைத்தேடி மருத்துவ தன்னார்வலர் பணியாளர்கள் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்டவைகளினால் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று சுகாதார பணியாளர்களுக்கு அதற்கான பரிசோதனை நடைபெற்றது .சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்சியை சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் செய்திருந்த நிலையில் சுகாதார பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.