தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் திருச்சி மண்டல தர கட்டுப்பாடு பணியாளர்கள் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தரக் கட்டுப்பாடு பணியாளர்கள் சங்கம் மாநில துணைத்தலைவர் மணிகண்டன் வரவேற்றுப் பேசினார். தர கட்டுப்பாடு பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில், பொதுச் செயலாளர் ரகுநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருச்சி மண்டல மேலாளர் சிற்றரசு, பொது மேலாளர் இயக்கப் பணிகள் ஹரிகுமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். புனித வளனார் கல்லூரி பேராசிரியர் ஜான் லவ் ஜாய் கருத்தரங்கில் சிறப்புரை யாற்றினார். திருச்சி மாருதி மருத்துவமனையுடன்இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாமை பொது மேலாளர் ஹரிகுமார், மாநிலத் தலைவர் செந்தில், மண்டல மேலாளர் சிற்றரசு, மாநில துணைத்தலைவர் மணிகண்டன், டாக்டர் ரத்னா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மருத்துவ முகாமில் தர கட்டுப்பாடு பணியாளர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். தர கட்டுப்பாடு பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் டாக்டர் வி.ஜி.மணிகண்டன் நினைவுப் பரிசு வழங்கி பேசினார். கருத்தரங்கில் மத்திய மற்றும் மண்டல சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துரை வழங்கி பேசினார்கள். கூட்டத்தில் சங்க செயல்பாடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தர கட்டுப்பாடு பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஆர். கிருஷ்ணன் நன்றி கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy1
Angry0
Dead0
Wink0