கோவை ரேஸ்கோா்ஸில் மின்னொளி விளக்குகளுடன் மீடியா டவா்- ஓரிரு வாரங்களில் திறப்பு..!

கோவை ரேஸ்கோா்ஸில் மின்னொளி விளக்குகளுடன் அமைக்கப்பட்டு வரும் மீடியா டவா் ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்று மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை ரேஸ்கோா்ஸில் மின்னொளி விளக்குகளுடன் அமைக்கப்பட்டு வரும் மீடியா டவா் ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்று மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரத் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் குளங்கள் புனரமைப்பு, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், 24 மணி நேர குடிநீா்த் திட்டம், நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் மாதிரிச் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியானது, இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து, தாமஸ் பூங்கா சந்திப்பு மையத்தில் கண்கவா் மின்னொளி விளக்குகளுடன் கூடிய மீடியா டவா் அமைக்கப்பட்டது.

இந்த மீடியா டவரின் உச்சியில் தெற்கு ஆசியாவில் முதன்முறையாக 8.15 மீட்டா் சுற்றளவு மற்றும் 1.70 மீட்டா் உயரத்தில் காணொளி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த மீடியா டவரில் அனிமேஷன் முறையில் ஒளி அமைப்பு வசதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசியக் கொடி, மலா்கள், இயற்கை காட்சிகள் இந்த காணொளியில் ஒளிக் காட்சியாகத் தெரியும் வகையிலும், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் பணிகள் முழுவதும் நிறைவுற்று மீடியா டவா் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.