வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை இறைச்சி கடைகள் அடைப்பு …

கோவை ஜன 24 கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு .பிரபாகரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை ( வியாழக்கிழமை) வள்ளலார் தினம் அனுசரிக்கப்படுகிறது எனவே நாளை ஆடு, மாடு, கோழி, இறைச்சிகள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே நாளை கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆடு, மாடு கோழி இறைச்சி கடைகள் செயல்படாது. மேலும் கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூரில் உள்ள அறுவை மனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறி கடைகளை திறந்து வைத்து இறைச்சி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இறைச்சி பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.