திருச்சி காங்கிரஸ் சார்பில் மதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்.

திருச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ் தலைமை தாங்கி மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவு திரட்டி பேசினார் கூட்டத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசியதாவது திருச்சி நாடாளுமன்ற தொகுதியை எனக்கு விட்டுக் கொடுத்த காங்கிரஸாருக்கு நன்றி மேலும் உங்களில் ஒருவனாக என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி காங்கிரஸ் மதிமுக ஆகிய இரண்டு இயக்கங்கள் இடையே ஆன நட்பு இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான உன்னத நட்பு திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஐந்து முறை போட்டி போட்டதில் ஒரு முறை மட்டுமே தோல்வி தழுவியுள்ளது நான் வெற்றி பெற்ற பிறகு அமையும் அலுவலகம் மதிமுக அலுவலகம் மட்டுமல்லாது காங்கிரஸ் திமுக அலுவலகமாக மாறும் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்ய பம்பரமாக சுழன்று பணியாற்றி நீங்கள் இருக்கிறீர்கள் எங்கள் தாத்தா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனவே நான் காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்டவன் என் தோளில் மதிமுக துண்டை தவிர வேறு எந்த துண்டை அணிந்ததில்லை தற்போது காங்கிரஸ் துண்டை அணிந்திருக்கிறேன் ஏனெனில் நான் பாரம்பரிய காங்கிரஸிலிருந்து வந்தவன் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைவராக பெற்று உள்ளீர்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுந்த போது ராகுல் காந்தி பெயரை முன் மொழிந்தவன் நான் இவ்வாறு துரை வைகோ பேசினார். நிகழ்வில் திமுக சார்பில் மேயர் அன்பழகன் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஜவகர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் என்கிற சீனிவாசன் கள்ளிக்குடி சுந்தரம் வக்கீல் என் சரவணன் சுஜாதா சுப சோமு சிக்கல் சண்முகம் மெய்ய நாதன் புத்தூர் சார்லஸ் வில்ஸ் முத்துக்குமார் கோட்டத் தலைவர்கள் ரவி சிவாஜி சண்முகம் ஜோசப் ஜெரால்டு ஓவியர் கஸ்பர் ஆனந்தராஜ் ராஜ்மோகன் பீமநகர் காசிம் செல்வகுமார் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளைஞர் காங்கிரஸ் மாநகர தலைவர் ரமேஷ் சந்திரன் முன்னாள் கவுன்சிலர் ஹேமா பொதுச் செயலாளர் சிவா விக்டர் எத்திராஜ் மலைக்கோட்டை சேகர் சரவணன் சேவாதன பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி செயலாளர் அப்துல் குத்தூஸ் மற்றும் பல ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.