தமிழகத்தின் கொரோனா அதிகரித்த 6 மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணியாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நகரங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது.
அந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணியாமல் இருத்தல் போன்ற தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்காத தன் காரணமாக நோய்தொற்று அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக இந்த ஆறு மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் என்றும், முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் முககவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.