மருதமலை கோவில் உண்டியல் வருமானம் ரூ 90 லட்சம்.

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது.இங்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. மொத்தம் 14 பொது உண்டியல்களில் ரூ. 90 லட்சத்து 44 ஆயிரத்து931 வசூல் ஆனது .தங்கம் 142 கிராம், வெள்ளி 4 கிலோ 300 கிராம், பித்தளை 9 கிலோ 995 கிராம் இருந்தது. கோவில் அறங் காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், துணை ஆணையர் செந்தில்குமார் வனபத்ரகாளி யம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா, ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலையில் உண்டி யல் காணிக்கை எண்ணப்பட்டது.