கோவை சிறையில் மாவோயிஸ்ட் உண்ணாவிரதம்.

கோவை: கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர் புடைய மாவோயிஸ்டுகள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பதுங்கி இருப்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .இதனை தொடர்ந்து கடந்த 20 15 ஆம் ஆண்டுகேரள போலீசார்,கியூ பிராஞ்ச் போலீசார் கருமத்தம்பட்டி போலீசாருடன் இணைந்து கருமத்தம்பட்டியில் ஒரு கடையில் பதுங்கி இருந்து மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர். இதில் அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் இயக்க தலைவர் ரூபேஷ் அவரது மனைவி சைனா, அனூப் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் மாவோயிஸ்ட் அனுப் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இந்த நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக கடந்த மாதம் அனூப் கோவை கோர்ட்டுக்கு அழைத்துச் வர ப்பட்டார். அப்போது அவர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்த போலீசார் அங்கிருந்த புத்தகங்களை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவை சிறை துறையினர் கோர்ட்டுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. இதை கண்டித்து கடந்த சில நாட்களாக மாவோயி ஸ்ட்அனூப் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறும்போதுமாவோயிஸ்ட் அனூப்தங்களிடம் புகார் எதுவும் தரவில்லை என்றும், அவர் உண்ணாவிராத போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தனர்.