கோயம்புத்தூர் ராஜாஜி நகரை சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மன்னார்குடி கோயம்புத்தூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த போது தனது சிகப்பு கலர் ட்ராலி பேக்கில் வைத்திருந்த 2 செல்போன்கள் தங்க நவரத்தின மாலை மற்றும் நவரத்தின மோதிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமி கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு ரயில் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களை தீவிரமாக தேடி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வ னிதா உத்தரவு பிறப்பித்து இருந்தார். சென்னை ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் கோயம்புத்தூர் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்ட் யாஸ்மின் அவர்களின் நேரடி கண்காணிப்பில் ஈரோடு ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா ஷா ய் ஸ்ரீ அவர்கள் தலைமையில் சப் இன்ஸ் பெக்டர்கள் மற்றும் போலீஸ் படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்த நிலையில் கொள்ளையன் சங்கர பாண்டியன் வயது 48. தகப்பனார் பெயர் கோமதி நாயகம். சங்கரன்கோவில் திருநெல்வேலி மாவட்டம். என்பவனை கைது செய்து கொள்ளை அடிக்கப்பட்ட பிளாக் கலர் இரண்டு மொபைல் போன்கள்.23 கிராம் நவரத்தின மோதிரம் கைப்பற்றப்பட்டது. குற்றவாளி மீது மதுரை திருநெல்வேலி திருச்சி ஆகிய மாவட்டங்களி ல் 20க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். சிறையில் அடைக் கப்பட்டான்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0