செவ்வாய் கிரகத்தை எப்படி சென்றடைவது என்று பல நாடுகள் பல முயற்சிகளை செய்து கொண்டிருந்தாலும், வெறும் நான்கு நாடுகள் மட்டுமே அதனை தற்போது வரை செய்து முடித்துள்ளது. அந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் இந்தியா அனுப்பிய மங்கள்யான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் அதிலும் மிகப் பெருமையான விஷயம். உங்களுக்கு மங்கள்யான் எப்படி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது என்பதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
மார்ச் ஆர்பிட்டாம் மிஷின் (மாம்) என்று அழைக்கப்பட்ட இந்த மங்கள்யான் மிஷன் 2013 நவம்பர் மாதம் திட்டமிட்டு 2014 செப்டம்பர் போது சரியாக செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. இந்த மொத்தம் மங்கள்யான் முயற்சிக்கும் 70 மில்லியன் செலவானது, அதாவது இந்திய மதிப்பில் 450 கோடி ஆகும்.
குறைந்த செலவில் குறைந்த எரிபொருள் பணத்தில் பூமியிலிருந்து ஒரு ஸ்பேஸ் கிராஃப்ட்-ஐ செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது இதுதான் முதல் முறை. அதுவும் முதல் முயற்சியிலேயே செய்தது என்பது இந்தியா செய்த சாதனையின் மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உலகிலேயே நமது இஸ்ரோவும் இந்தியாவும் ஸ்பேஸ் ரிசர்ச்சில் சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டியதும் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு பிஎஸ்எல்வி சி25 நான்கு நிலையங்களைக் கொண்ட ராக்கெட் மூலமாக பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த மங்கள்யான் ராக்கெட் அந்த நான்கு நிலையங்களில் நான்காவது இடத்தில் இருந்தது. இந்த ராக்கெட்டில் மொத்தம் மூன்று ஸ்டேஜ் இருக்கும். இந்த ராக்கெட்டினால் மங்கள்யானை பூமிக்கு வெளியில் தான் கொண்டு செல்ல முடிந்தது. இது தவிர தன்னுடைய ஈர்ப்பு விசையை அந்த பேஸ்ட்டாக்டினால் உடைக்க முடியவில்லை.
அது பூமியை சுற்ற ஆரம்பித்தது. பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியே வருவதற்கு 11.2 கிலோ மீட்டர் பர் செகண்ட் வேகத்தில் சென்றால் மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடியும். இதைத்தான் எஸ்கேப் வெலாசிட்டி என்று அழைப்பார்கள். இந்த வேகத்தை அடைவதற்கு பூமியினுடைய ஈர்ப்பு விசையை ஒரு பியூயலாக பயன்படுத்தினார்கள். இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் பூமியை நீர்வட்ட பாதையில் சுற்றி வந்தது. பெர்ஜி மற்றும் அப்போதி என்று கூறப்படுகின்ற இந்த இரண்டு முனைகளும் பூமிக்கு மிக அருகிலும், பூமியிலிருந்து மிகத் தொலைவிலும் இருக்கக்கூடிய இரண்டு புள்ளிகள்.
இதனால் பூமியை விட்டு விலகிச் செல்லும்போது அந்த ஸ்பேஸ் கிராஃப்ட் கொஞ்சம் மெதுவாக செல்லும். அதுவே பூமியை நோக்கி வரும்போது அதி வேகமாக வரும். அந்த அதிவேகத்தில் வரும் போது கொஞ்சம் அதிகப்படியான ஃப்யூயல் எனர்ஜியை பயன்படுத்துவதன் மூலமாக இந்த நீள் வட்ட பாதையை இன்னும் கொஞ்சம் அதிகமாக முடியும். இது போன்று அதிகமாக்குவதால் என்ன நடக்கும் என்றால் ஹில்ஸ் பியரிலிருந்து வெளியில் செல்ல முடியும். அதாவது சூரிய குடும்பத்தில் அதிகப்படியான நிறைய அளவு கொண்டது சூரியன். சூரியனுக்கு ஒவ்வொரு கிரகத்தின் மேலேயும் ஒரு புவி ஈர்ப்பு ஆற்றல் உள்ளது.
அதேபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி புவி ஈர்ப்பு விசை உள்ளது. இதைதான் ஸ்பேர் ஆஃப் இம்புளுயண்ட் என்று அழைப்பார்கள். இந்த அமைப்பிற்குள் எந்த பொருள் வந்தாலும் அந்த கிரகத்திற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். இதிலிருந்து வெளியில் செல்லக்கூடிய எந்த பொருள்களாக இருந்தாலும், அது சூரியனுடைய ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படும். இதனால் தான் மங்கள்யானை பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியில் கொண்டு செல்வதற்கு முடிவு செய்தார்கள். அதனால் தான் ஒவ்வொரு முறையும் மங்கள்யான் பூமியை சுற்றி வரும்போதும் பூமிக்கு அருகில் வரும் நேரங்களில் எரிபொருளை அதிகளவு வெளிப்படுத்துவதன் மூலமாக அதன் நீள் வட்டத்திலிருந்து அதன் பாதையை அதிகமாக்கினார்கள்.
இதேபோன்று ஆறாவது சுற்று பாதையில் தான் ஃப்ளூயலை அதிகளவு பயன்படுத்தி ஈர்ப்பு விசையை முறியடித்து மங்கள்யான் பூமியின் கைப்பிடியில் இருந்து வெளியே வந்தது. அதன் பிறகு மங்கள்யான் சூரியனுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்தது. இதில் தான் இஸ்ரோவின் புத்திசாலித்தனத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பூமியிலிருந்து விலகுவதற்கு அந்த ஆறாவது சுற்று பாதையில் சரியான நேரத்தை தேர்வு செய்தார்கள். இஸ்ரோ நமது பூமியும் இந்தப் பக்கம் நமது செவ்வாய் கிரகமும் சூரியனிலிருந்து சரியாக 44 டிகிரி என்ற விட்டத்தில் இருக்கும் பொழுது மங்கள்யான் வெளியில் வருவது போன்று திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
அதே போன்று மங்கள்யான் நீள்வட்டப் பாதையில் இருந்து வெளியில் வந்ததது. இதனால் மங்கள்யான் சூரியனுடைய ஈர்ப்பு விசைக்கு ஏற்றது போல் சூரியனை சுற்றிவர ஆரம்பிக்கும். அதே நேரத்தில் செவ்வாய் கிரகமும் சூரியனை சுற்றி வரும். சரியாக செவ்வாய் கிரகமும் மங்கள்யானும் ஒரு கட்டத்தில் ஒரே இடத்தில் சந்திக்க நேரிடும். அந்த இடத்தில் மங்கள்யான் ஸ்பேஸ் கிராஃப்ட்-ஐ ஃப்ளூயலை வெளியிடுவதன் மூலமாக அதன் வேகத்தை குறைக்கும் பொழுது செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்குள் சென்று விடும். அதன் பிறகு செவ்வாய் கிரகத்தை அது சுற்றிவர ஆரம்பித்து விடும்.
இதனை ஆஃப் மேன் டிரான்ஸ்பர் என்று அழைப்பார்கள். சரியாக இஸ்ரோ திட்டமிட்டு இதை செய்யவில்லை என்றால் அடுத்து 780 நாட்கள் கழித்து தான் இதுபோன்று மற்றொரு சூழ்நிலை உருவாகும். அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை ஆவதற்கு வாய்ப்புள்ளது. 2014 ஆம் இந்த முயற்சி தோல்வி அடைந்திருந்தால் அதுக்கு அடுத்து 2016 ஆம் ஆண்டு தான் அடுத்த மெஷின் இருந்திருக்கும். 2016 ஆம் ஆண்டு தோல்வி அடைந்திருந்தால் 2018 ஆம் ஆண்டு அடுத்த மெஷின் வந்திருக்கும். இவர்கள் முதலிலேயே சரியாக திட்டமிட்டு மங்கள்யானை செயல்படுத்தியதால் 2014 ஆம் ஆண்டு இதனை செய்து முடிக்க முடிந்தது.
உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழலாம், அதாவது செவ்வாய் கிரகமும் பூமியும் வெறும் 54 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சந்திக்கும். அப்போது மிகவும் பக்கமாக இருந்திருக்கும். அந்த சமயத்தில் நாம் ஸ்பேஸ் கிராஃப்ட் ஐ அனுப்பி வைத்திருந்தால் மிகவும் எளிதாக இருந்திருக்கும் என்று எண்ணலாம். ஆனால் ஒரு ஸ்பேஸ் கிராஃப்ட் ஐ நேரடியாக பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் பொழுது அதிகப்படியான எரிபொருள் செலவாகும். எரிபொருளுக்கான காசும் அதிகமாகும். இதுபோன்று ஆப் மேன் டிரான்ஸ்பர் மூலமாக செயல்படுத்துவதனால் பூமி, சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைகளிலேயே மங்கள்யான் எரிபொருளாக பயன்படுத்தி உள்ளது.
இது பயணம் செய்யக்கூடிய தொலைவு மிகவும் அதிகம். அதாவது 780 மில்லியன் கிலோ மீட்டர் தூரம். நம் எரிபொருளானது வெறும் பூமியிலிருந்து நிலவுக்கு செல்வதற்கு எந்த அளவு எரிபொருள் தேவையோ அந்த அளவே செலவாகி உள்ளது. எரிபொருள் செலவில் மிகுந்த சிக்கனமாக இஸ்ரோ முயற்சியை மேற்கொண்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் எதற்கு செல்ல வேண்டும். முதலில் இந்தியாவிலும் இதனை சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க மங்கள்யானை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. அதுவும் குறைந்த செலவில் முதல் முயற்சியில் செய்தது இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.
அதை தொடர்ந்து மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களான நாசா, ரஷ்யா அனுப்பி வைத்த ஸ்பேஸ் கிராஃப்ட் போல நமது மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் அருகாமையில் சுத்த போவது கிடையாது. இது செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் தொலைவில், அதாவது செவ்வாய் கிரகத்தை முழுமையாக படம் பிடிக்கும் வகையில் மங்கள்யானின் சுற்றுப்பாதையை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏனென்றால் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் அட்மாஸ்பியர் அதாவது சுற்றுச்சூழல் நிலையை, வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, மீத்தேனை ஆராய்ச்சி செய்வதற்கு தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மங்கள்யானில் இருப்பது சாதாரணமாக பயன்படுத்தப்படும் கேமரா. நாம் மங்கள்யான் எடுத்த புகைப்படத்தை பார்க்கும் போதே அது நாம் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும். அடுத்து மங்கள்யான் 2, 2024 ஆம் ஆண்டு அனுப்பப்படும் என்று பேசப்பட்டு வருகிறது. மங்கள்யானை நாம் நேரடியாக பார்த்ததில்லை என்று நினைப்பவர்கள் 2000 ரூபாய் நோட்டில் ஒரு ஸ்பேஸ் கிராஃப்ட் புகைப்படம் இருக்கும் அதுதான் மங்கள்யான் புகைப்படம். பாத்துக்கோங்க..