திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, கோனேட்டி கிணறு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் எல்லையம்மன், காளியம்மன் மற்றும் நாகாலம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.இந்நிலையில் இன்று மேற்கண்ட கோயில்கள் மண்டலாபிஷேகம் காலை நடந்தது.. காலை அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.பின்னர் அலங்காரங்கள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஓத பல்வேறு பூஜைகள் நடந்தன.மண்டாலபிஷேகத்தை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு மண்டலாபிஷேகம் நிகழ்ச்சியை ஒட்டி வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ஜெயராமன், சரவணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0