கோவை பஸ் ஸ்டாப் மரத்தில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை..

கோவை போத்தனூர் எண் 4 பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு மரத்தில் நேற்று ஒரு ஆண் பிணமாக தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.இது குறித்து குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி பாலச்சந்திரன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.