கோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தவர் கைது.

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கீரணத்தம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சோபர்தான் சமல் மகன் சஞ்சயகுமார் சமல் (வயது 40)என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 34 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 1,லட்சத்து14, ஆயிரத்து 400ஆகும். இந்த சாக்லேட்டுகளை வடமாநிலத்தில் இருந்து கடத்தி வந்து கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.