திருவலம் ரயில் தண்டவாளத்தில் 9 அடி நீள இரும்பு துண்டு மற்றும் கல் வைத்த நபர் கைது

காட்பாடி கடந்த 17.8.2024 ஆம் தேதி மதியம் 1.50 மணிக்கு முகுந்த ராயபுரம் ரயில் நிலையத்திற்கும் திருவலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் தண்ட வாளத்தின் மீது 9 அடி நீளமுள்ள இரும்பு துண்டு மற்றும் கல்லை மர்ம நபர்கள் வைத்துச் சென்றது தொடர்பாக முகுந்த ராயபுரம் ரயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரை பெற்று காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த குற்றச் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா அவர்களின் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் சேலம் ரயில்வே டிஎஸ்பி பெரியசாமி தலைமையில் காட்பாடி ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூவாந்திகா மற்றும் போலீஸ் படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நவீன் குமார் வயது 21.தகப்பனார் பெயர் லேட் முனுசாமி. வாலாஜாபேட்டை தாலுக்கா ராணிப்பேட்டை. என தெரிய வந்தது. அவனைப் பிடித்து விசாரித்த போது அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதின் பேரில் அவனை கைது செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று வழக்கு தடயங்களை கைப்பற்றி வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். சிறையில் அடைக்கப் பட்டான். ரயில் வண்டிகளுக்கும் ரயில் வண்டியில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு கேடு விளைவிக்கும் குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஒரு வார காலத்திற்குள் கைது செய்த தனிப்படையினரை தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வ னிதா மற்றும் சென்னை ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோ ர் வெகுவாக பாராட்டி னார்கள்.ரயில் பயணிகள் பாதுகாப்பு சம்ம ந்தமான புகார்களுக்கு 24×7 இருப்புப் பாதை காவல் உதவி மைய எண் 1512 மற்றும் வாட்ஸ் அ ப் எண் 9962500500ஐ தொடர்பு கொள்ளவும்.