பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை அறிவிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அமர்த்தியா சென் திடீரென மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்றும் குறிப்பாக திமுக இந்த தேர்தலில் நல்ல வெற்றியை பெரும் என்றும் அமர்த்தியாசென் கணித்துள்ளார்.
அமர்த்தியா சென் ஆலோசனைப்படி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.