கோவை கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மதுரை கும்பல் கைது.

கோவை: மதுரையைசேர்ந்த ஒரு கும்பல் அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாகமாநகர தனிபடை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்து தனிப்படை போலீசார் நேற்று அங்குள்ள ரயில்வே கல்யாண மண்டபம்அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை யடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மதுரையைசேர்ந்த அஜித்குமார் (வயது 27), மதுரை பாண்டியன் நகர் செவத்த பாண்டி ( வயது 26) காமராஜபுரம் சதீஷ்குமார் (வயது 33) அம்மாபட்டி முனியாண்டி (வயது 17) தெரியவந்தது.இவர்களிடமிருந்து கஞ்சா இருசக்கர வாகனம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.