மத்வராயபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நகர் ஆலய அசன பண்டிகை.

கோவை, ஆலாந்துறை அருகே மத்துவராயபுரத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இதன் 11 -வது ஆண்டுபிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் பேருக்கு அசைவ அசன விருந்து பரிமாறப்பட்டது. முன்னதாக அருகிலுள்ள குழந்தைகள், மனவளர்ச்சி குன்றியோர், மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விழாவில் டி.இ.எல்.சி முன்னாள் பேராயர் எட்வின் ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்பு செய்தி வழங்கினார். ஆயர் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், கருணாகரன், செயலாளர் ஞானப்பிரகாசம், பொருளாளர் செல்வன் ஜெயசிங், திருமண்டலகுழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஆனந்ஆசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.