கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பக்கம் உள்ள பெரிய குருக்கை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 22) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட கூலி வேலை செய்து வந்தனர்.இந்த நிலையில் கேட்டு முன்தினம்கணவர் வீட்டில் இல்லாத நேரம் ராஜலட்சுமி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்நேற்று இறந்தார். இது குறித்து அவரது தாயார் புஷ்பா வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0