கோவை அருகே உள்ள காணப்பட்டி, நேரு நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜோதிகா ( வயது 23) இவர்கள் இருவரும் 20 18 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவரது கணவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது . இதனால் மனமுடைந்த ஜோதிகா கணவர் வெளியே சென்ற நேரம் வீட்டில் விட்டதில் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0