கோவை கணுவாய் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 22) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கோகிலா ( வயது 24) என்ற பெண்ணுடன்பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும்அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்தனர் . இந்த காதல் விவகாரம் இருவரது பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது..இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.. எனவே காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் நவாவூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர் .தொடர்ந்து இருவரும் பாதுகாப்பு கேட்டு வடவள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பு பெற்றோர்களையும் போலீஸ் நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். பின்னர் காதல் ஜோடிகள்போலீஸ் அதிகாரிகளுக்குநன்றி சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றனர்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0