கேரள லாட்டரி டிக்கெட் விற்றவர் சிறையில் அடைப்பு.

கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ,சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் நேற்று கவுண்டம்பாளையம் ரோட்டில் உள்ள அசோக் நகர் பகுதியில் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக கவுண்டம்பாளையம் அசோக்நகர் ராஜ்குமார் (வயது 41) கைது செய்யப்பட்டார். 12 லாட்டரிடிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.