காதலி பேச மறுத்ததால் ஓட்டல் அறையில் காதலன் தூக்கு போட்டு தற்கொலை

கோவை,புதுகோட்டையை சேர்ந்தவர் விக்னோஷ்வரன் (19). இவர் கோவை சுந்தராபுரத்தில் தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வந்தார். விக்னோஷ்வரன் கடந்த 2 வருடங்களாக ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் சில நாட்களாக காதலன் விக்னோஷ்வரனுடன்சரியாக பேசுவதில்லை. பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் அவர் மன வேதனை அடைந்தார். நேற்று வழக்கம் போல வேலைக்கு வந்த விக்னோஷ்வரன் ஓட்டலில் உள்ள அறைக்கு சென்றார். வெகு நேரமாகியுடம் அவர் வெளியே வராததால் ஊழியர் ஒருவர் அங்கு சென்று கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சக ஊழியர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது விக்னோஷ்வரன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விக்னோஷ் வரன் உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.