லாக்-அப் மரணங்கள், என்கவுண்டர் பலி இழப்பீடு தொகை ரூ.7.5 லட்சமாக உயர்வு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

மிழக காவல் நிலையங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் என்கவுண்டர் பலி உள்ளிட்ட காவல் மரணங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் ஆண்டுதோறும் காவல்துறை விசாரணையில் ஏற்படும் மரணங்கள் என்பது உயர்ந்து வருகிறது. இது மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் ஒரு குற்றவாளிடம் நடத்தப்படும் விசாரணையில் விளைவாக நிகழும் மரணம் மட்டுமின்றி குற்றவாளியை காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல் வேறு இடத்தில் வைத்து விசாரணை நடத்துவதாலும் மரணங்கள் ஏற்படுகிறது. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை அடித்து துன்புறுத்துவதன் மூலம் குற்றம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில் விசாரணையில் ஈடுபடும் காவல்துறையினரால் இத்தகைய நிகழ்வு அரங்கேறி வருகிறது.சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை விசாரிக்கும் பொழுது கண் மூடித்தனமாக அடிப்பதாலும், விசாரணை முடிவை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வதும் காவல் மரணங்களில் அடங்கும். இந்நிலையில் தமிழகத்தில் காவல் நிலையங்களில் உயிரிழப்பு போருக்கான இழப்பீடுத் தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதே போன்று துப்பாக்கி சூட்டில் பலியானவருக்கான இழப்பீட்டு தொகையும், பலாத்காரம் செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ. 7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களால் நிரந்தர உடல் முடக்கம் ஏற்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகை ரூ. 7.5 மச்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களால் உடல் ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளான கைதிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய மகளிர் உரிமைகள் ஆணையம் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.