ஓணம் பண்டிகை ஒட்டி வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை: கோவை கலெக்டர் சமீரன் அறிவிப்பு..!

கோவை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 8ம் தேதி (வியாழன்)கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில், உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக அந்த அலுவலகங்கள் வருகிற 17ம் தேதி (சனிக்கிழமை) முழு பணி நாளாக செயல்படும். கோவை
மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.