பாட்கோ சார்பாக அமைச்சர் தலைமையில் சிறுதொழில் தொடங்குவதற்கான 56 பேருக்கு கடனுதவி..!

காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு வரைநிலை கழகம் சார்பாக பாட்கோ போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் சிறு தொழில் தொடங்குவதற்கு கடன் உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் 56 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும் 50,000 மற்றும் ஒரு லட்சம் கடன் உதவி ஆகும் இதில் நான்கு பேருக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உதவி அளிக்கப்பட்டது. இதில் பத்தாயிரம் ரூபாய் சப்சிடி போக மீதி பணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்றும் குறைந்த வட்டி விகிதம் வசூலிக்கப்படும் என்றும் மேலும் பெண்களுக்கு 4% சதவீதம் வட்டியும் ஆண்களுக்கு 5% சதவீதம் ஆகும். இத்திட்டம் சுமார் ஏழு ஆண்டுக்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்..