கோவையில் 88 ரவுடிகள் மீது மின்னல் வேட்டை- நடவடிக்கை தொடரும்.. காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..!

கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் ரவுடிசத்தில் ஈடுபடும் ரவுடிகளின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களில் 88 ரவுடிகள் மீது காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 9 ரவுடிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. ரவுடிசத்தில் ஈடுபட்ட 62 ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் மீது நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டும், 17 ரவுடிகளின் மீது பிடிஆணை நிறைவேற்றப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களின் மீதான இந்த மின்னல் வேட்டை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரித்துள்ளார். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தில் இதுபோன்ற ரவுடிசம் செய்யும் நபர்கள் குறித்த காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.