தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் துரைராஜ் ( வயது 70) இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் ரவிராஜ் ( வயது 50) இவருக்கு மனைவி 2 மகன்கள் உள்ளனர் ரவிராஜ் குடிப்பழக்கம் உடையவர் .தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது .இதனால் அவர் ஒரு மகனுடன் தந்தைவீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ரவிராஜ் மட்டும் தனியாக தங்கி யிருந்து காவலாளி யாக வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வாங்கி செல்வது வழக்கம் .அதன்படி கடத்த 14 ’10- 20 20 அன்று மதியம் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். வீட்டில் அவரது தந்தை துரைராஜ் மட்டும் இருந்தார். ரவிராஜ் வழக்கம்போல மது குடிக்க பணம் கேட்டார் அவர் தந்தை துரைராஜ் அவரை மிகவும் திட்டி விட்டுவிட்டு வெளியே போ என்று கூறினாரம். இதனால் ஆத்திரமடைந்த ரவிராஜ் தந்தையை அடித்து கொலை செய்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 3- வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதில் தந்தையை கொன்ற மகன் ரவிராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பத்மா தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ 100 அபராதமும் விதித்து உத்தர விட்டார்.