ஈரோடு மேற்கு மாவட்டம் கோபி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இஸ்லாமியபிரச்சார பேரவை மற்றும் அர் ரஹ்மான் மர்க்கஸ் இணைந்து நடத்தும் ரமலானை வரவேற்போம். மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் தினியாத் மதரஸா ஆண்டு விழா கோபி சிலேட்டர் ஹவுஸ் வீதியில் நடைபெற்றது. ஈரோடு மேற்கு மாவட்ட துணைத் தலைவரும் மர்க்கஸ் செயலாளர் ஜிவா சாகுல் அமீத் பாட்ஷா தலைமை வகித்தார்தலைமையில் நடைபெற்றது கோபி நகர தமுமுக செயலாளரும் யாகூப் வீதி மதரஸா நிர்வாகி ஹம்சர் பாட்ஷா வரவேற்பு உரை ஆற்றினார். இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் சத்தி சையத் கரீம் பையாஸ்
தமுமுக மாவட்ட செயலாளர் குத்புதீன் மமக மாவட்ட செயலாளர் சலீம் ராஜா , கோபி நகர தமுமுக துணை செயலாளர் அர் ரஹ்மான் மர்க்கஸ் பொருளாளருமான தெளபிக் , ஈரோடு மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளரும் மர்க்கஸ் துணைச் செயலாளர் ஜியா, கோபி நகர தலைவர் ஆடிட்டர் சம்சுதீன் கோபி தமுமுக நகர நிர்வாகிகளான , அல்தாப் அஹமது, கன்சூல் ரஹ்மான், மற்றும் மாவட்ட துணை ,அணி நகர நிர்வாகிகள் ,மதரஸா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது ரமலான் எதிர்பார்ப்பது என்ன என்ற தலைப்பில்? மார்க்க உரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு மார்க்க திறனாய்வுப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. 23 வது வார்டு தமுமுக கிளை தலைவரரும் சிலேட்டர் ஹவுஸ் வீதி மதரஸா நிர்வாகி அசேன் நன்றியுரை கூறினார். 300 மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்தை மதரஸா நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0