ஜெயலலிதாவுக்காக அனைவரும் ஒன்றிணைவோம் – சசிகலா அழைப்பு..!

திமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்தாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தாலும் ஆட்சி மாறிய பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் நேரடியாக வெளிப்பட்டது.

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பின்படி கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

அதன் பிறகு ஓபிஎஸ் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதிமுக எடப்பாடி தரப்புக்கு சொந்தமானதால் அவருடைய ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சசிகலா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அனைவரும் ஒன்றிணைவோம். வென்று காட்டுவோம். ஜெயலலிதா பிறந்தநாளில் உறுதி ஏற்போம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஜெயலலிதா எண்ணங்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து நடக்க வேண்டும் என்றும் சசிகலா கூறியுள்ளார்.