கோவை: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி,அட்டமலா, முண்டக்கயம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்இன்று அதிகாலையில் அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. ஏராளமானவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி பலியானார்கள். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக கருதப்படுகிறது. இன்று மதியம் வரை 48 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மத்திய மீட்பு படை வயநாடு விரைந்து உள்ளது..வயநாடு பகுதியில் உள்ள ஹரிசன்தேயிலைத் தோட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான தங்கும் விடுதிகள் (ரிசாட்டுகள்) சரிந்து விழுந்தன. இதில் வெளிநாட்டவர்கள் தங்கி உள்ளனர். அவர்களும் இறந்திருப்பதாக தெரிகிறது. அங்கு வேலை செய்து வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கேரள மாநிலத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் “ரெட் அலர்ட் “விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0