நீலகிரி பாராளுமன்றம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பாஜக வேட்பாளர் எல்.முருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பைக்காரா, அனுமாபுரம், நடுவட்டம், மேல்கூடலூர் போன்ற ஊர்களில், மக்களைச் சந்தித்து மத்திய அரசின் சிறப்பான திட்டங்களை கூறி வாக்கு கூறி சேகரித்தார், திரளான மக்கள் பகுதிகளில் தங்களது ஆதரவை தெரிவித்தனர், தொடர்ந்து நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஓவேலி, கூடலூர் நகர் மற்றும் புளியம்பாறை பகுதி பொதுமக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டு வாக்குறுதிகளை அறிவித்தார், பாரதப் பிரதமர் அவர்களின் பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பற்றியும், எடுத்துக் கூறினார்,
கூடலூர் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளான, டான்டீ தொழிலாளர்களுக்கு பிரச்சனை மற்றும் சட்டப் பிரிவு-17 நீக்குவதற்கான கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்தார்,
மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரநிகழ்வுகளில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர் மற்றும் அனைத்து இடங்களிலும் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கழகத் தோழர்கள் கூடலூர் பல பகுதிகளில் இருந்து திரளாக கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை வேட்பாளர் எல் முருகன் அவர்களோடு இணைந்து வெகு சிறப்பாக ஓட்டு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் வருகை புரிந்த அனைவருக்கும் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் அவர்கள் நன்றி தெரிவித்தனர்,
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0