கூடலூர் தேசிய மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் பழுதடைந்ததால் மரக்கன்றுகள் நடும் விழா.!

நீலகிரி கூடலூர்தேசிய மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான கூடலூர் புதியபேருந்து நிலையம் உள்பட நகரபகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் கீழ்நாடுகாணி உள்பட பகுதியில் மாநிலசாலைகள் விபத்துகள் ஏற்பட்டு மரணகிணறாக நாளுக்கு நாள் மாறிவரும் சாலைகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகளில் கவனக் குறைவு என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றன . இந்தப் பழுதடைந்த சாலைகளை உடனடியாக பராமரிக்க கோரியும் கூடலுர் நகரபகுதியில் தரமற்றமுறையில் நடைபாதையில் அமைத்த தடுப்பு வேலிகளை தரமான முறையில் சீரைமைக்கவும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் பிச்சை எடுத்து பொதுமக்களே பராமறிக்க பிச்சை எடுக்கும் போராட்டம் நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் சார்பில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 14/7/2024 ஆம்நாள் காலை 11 மணிக்கு கூடலூர் பேருந்துநிலையம் முன்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று எஸ் கே ராஜ் நீலகிரி தொகுதிமக்கள் இயக்கம் அறிவித்துள்ளது..